நாங்குநேரி சம்பவத்தை கண்டித்துஇந்திய மாணவர் சங்கத்தினர் மனிதசங்கிலி


நாங்குநேரி சம்பவத்தை கண்டித்துஇந்திய மாணவர் சங்கத்தினர் மனிதசங்கிலி
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தினர் மனிதசங்கிலி போராட்டம் நடந்தது.

தூத்துக்குடி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் பள்ளிக்கூட மாணவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் சமத்துவத்துக்கான மனிதசங்கிலி நடத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் வ.உ.சி கல்லூரி கிளை சார்பில் சமத்துவத்திற்கான மனித சங்கிலி இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாணவர்கள், சாதி, மத, இன, மொழி, பாலின வேறுபாடு இன்றி மாணவர்களாக ஒன்றிணைவோம், வேற்றுமை உணர்வை தகர்க்க அனைவரும் கைகோர்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.

இதில் இந்திய மாணவர் சங்கம் வ.உ.சி. கல்லூரி கிளை நிர்வாகிகள் ஆசைத்தம்பி, ராஜ் பிரவீன், மாடசாமி, மாதவன், பட்டு ராஜா, மாவட்ட குழு நிர்வாகி செல்வின், அலெக்ஸ் உள்பட திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story