சபாநாயகரை கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவுவை கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவுவை கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். நகர தலைவர் செல்வப்பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், நகர அமைப்பாளர் சிவராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது திருச்சியில் ஒரு கல்லூரி விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், அவரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் தமிழக கவர்னருக்கு அனுப்புவதற்காக, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியனிடம் ஒரு மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story