போதைப்பொருள் பதுக்கியவருக்கு நிபந்தனை ஜாமீன்: ஆஸ்பத்திரிக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும்


போதைப்பொருள் பதுக்கியவருக்கு நிபந்தனை ஜாமீன்: ஆஸ்பத்திரிக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும்
x

ஆஸ்பத்திரிக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என போதைப்பொருள் பதுக்கியவருக்கு நிபந்தனை விதித்து மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

மதுரை

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி அவர், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் மீது வேறு எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து நீதிபதி, மனுதாரர் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு, நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர், ரூ.50 ஆயிரத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்க வேண்டும். நன்கொடை செலுத்தியதற்கான ரசீதை விசாரணை கோர்ட்டில் செலுத்த வேண்டும்.

மறு உத்தரவு வரும் வரை மனுதாரர் தினமும் காலை 10:30 மணிக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட ஜாமீன் நிபந்தனைகளையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

1 More update

Related Tags :
Next Story