சேலம் ஆவின் பால்பண்ணை வளாகத்தில் திறக்கப்பட்ட ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் பல்வேறு சுவைகளில் 'கோன் - கப் ஐஸ்கிரீம்கள்' தரமாக, தடையின்றி வழங்க ஏற்பாடு


சேலம் ஆவின் பால்பண்ணை வளாகத்தில்  திறக்கப்பட்ட  ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் பல்வேறு சுவைகளில் கோன் - கப் ஐஸ்கிரீம்கள்  தரமாக, தடையின்றி வழங்க ஏற்பாடு
x

சேலம் ஆவின் பால்பண்ணை வளாகத்தில் திறக்கப்பட்ட ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் பல்வேறு சுவைகளில் தயாரிக்கப்படும் 'கோன் - கப் ஐஸ்கிரீம்கள்" தரமாக, தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம்

சேலம்,

புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை

ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் உப பொருட்களான நெய், பால்பவுடர், பன்னீர், வெண்ணெய், பால்கோவா, தயிர், மோர், லஸ்ஸி, யோகர்ட், நறுமண பால் வகைகள், இனிப்புகள், ஐஸ்கிரீம், குல்பி, சாக்லேட் மற்றும் குக்கீஸ் வகைகள் நுகர்வோர்களுக்கு வினியோகம் செய்து வருகின்றது.

சேலம் இரும்பாலை அருகே உள்ள ஆவின் நிறுவனத்தின் சார்பில் கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் பயன்பெறும் வகையில் சேலம் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் ரூ.12 கோடியே 26 லட்சம் செலவில் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.

திறந்து வைத்தார்

இந்த புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த தொழிற்சாலை மூலம் 50, 100, 500 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் அளவுகளிலும், நுகர்வோர்களுக்கு தேவைக்கேற்ற அளவுகளிலும் ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. பல்வேறு சுவைகளில் தயாரிக்கப்படும் கோன், கப் ஐஸ்கிரீம்கள் அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மூலம் நுகர்வோர்களுக்கு தரமாக, தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் ஆவின் பால்பண்ணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், ஆவின் பொது மேலாளர் விஜய்பாபு, துணைப்பதிவாளர் செந்தில்குமார், சேலம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மலர்கொடி ராஜா, ஊராட்சிமன்ற தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story