புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி மாநாடு


புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி மாநாடு
x

தர்மபுரியில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி மாநாடு நடந்தது.

தர்மபுரி

தர்மபுரி பெரியார் மன்றத்தில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி மாநாடு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் கொடியேற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதன் வரவேற்று பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர் அரிகரன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். நகர பொருளாளர் விஜய் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும். ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய சிகிச்சை பிரிவுகளை தொடங்க வேண்டும். மொரப்பூர்-தர்மபுரி ரெயில் பாதை இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் காசியம்மாள், நகர செயலாளர் பார்த்திபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, மாதேஷ், பன்னீர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.


Next Story