காரைக்குடியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநாடு


காரைக்குடியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநாடு
x
தினத்தந்தி 25 Nov 2022 12:15 AM IST (Updated: 25 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மாநாடு நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு ரத்தினம், மாநில துணை தலைவர் மீனாள், மாவட்ட தலைவர் காளைலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டு கொடியினை அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் காஜா முகைதீன் ஏற்றி வைத்தார். மணவழகன் வரவேற்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொடக்க உரையாற்றினார். விவசாய சங்க மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணகி, உள்ளாட்சி பிரிவின் மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன், ஏ.ஐ.பி.இ.எ. பொதுச்செயலாளர் மதிமாற்செலசு, விவசாய சங்க மாவட்ட செயலாளர் காமராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சிவாஜி காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் மஞ்சுளா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதையொட்டி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாவட்ட தலைவராக காளைலிங்கம், துணை தலைவர் சகாயம், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, துணை செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் மணவழகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில், மத்திய அரசின் தொழிலாளர் விரோத திருத்தங்களை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Related Tags :
Next Story