ருக்மணி வரதராஜன் கல்லூரியில் கருத்தரங்கம்


ருக்மணி வரதராஜன் கல்லூரியில் கருத்தரங்கம்
x
தினத்தந்தி 6 April 2023 7:15 PM GMT (Updated: 6 April 2023 7:16 PM GMT)

ருக்மணி வரதராஜன் கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் அடுத்த செம்போடை ருக்மணி வரதராஜன் என்ஜினீயரிங் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக கல்வி அறிவில் சிறந்து விளங்க எவ்வாறு வியூகம் வகுக்க வேண்டும்? என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு செம்போடை ஆர்.வி.கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வரதராஜன் தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார். கருத்தரங்கை என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் செந்தில்வேலன் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் முகமது பைசல் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக திருக்குவளை அண்ணா பல்கலைக்கழகம் கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் ஸ்ரீதரன் கலந்து கொண்டு பேசினார். அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட்ட குறும்படம் போட்டியில் வெற்றி பெற்ற கணினி அறிவியல் துறை மாணவர்கள் ஹரிபாபு, சதீஷ்குமார் மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் பிருந்தா வரவேற்றார். முடிவில் கணினி அறிவியல் துறை தலைவர் பாரதி கண்ணன் நன்றி கூறினார்.


Next Story