ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாநாடு


ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாநாடு
x

வாலாஜாவில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாநாடு நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க ராணிப்பேட்டை மாவட்ட முதல் மாநாடு வாலாஜாபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் டி.வி.எத்துராஜ் தலைமை தாங்கினார். கலைநேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன் அறிக்கை வாசித்தார். மாநிலத்தலைவர் கோ.முரளிதரன் கவுரவிக்கப்பட்டார்.

கூட்டத்தில் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும், 70 வயதானவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும், மருத்துவப்படி 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும், மூத்த குடிமக்களுக்கு ெரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும், நாடாளுமன்ற நிலைக்குழு அறிவித்துள்ள ஓய்வூதிய அறிக்கையை உடனே அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் குறித்து பேசினர்.

வரதன், சுந்தரேசன், கோவிந்தசாமி, ஜெயக்குமார், தேவநேசன், மோகன், கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டனர். மேலும் இயற்கை மருத்துவம் பற்றி, ஆரோக்கியத்தின் சாவி என்ற தலைப்பில் அரசு மருத்துவர் எஸ்.சசிரேகா ஆலோசனை வழங்கினார். முடிவில் மாநில இணை செயலாளர் நிலவு குப்புசாமி நன்றி கூறினார்.


Next Story