ஓசூரில்அதிக பாரம் ஏற்றி சென்ற 9 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன், கிருஷ்ணகிரி ஆய்வாளர் அன்புசெழியன் மற்றும் செக்போஸ்ட் வாகன ஆய்வாளர் லியோ அந்தோணி ஆகியோர் ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஓசூரில் இருந்து எம்.சாண்ட் பாரம் ஏற்றி கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்ற 9 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 9 லாரிகளிலும் அதிக பாரம் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த 9 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அபராதமாக ரூ.4 லட்சத்து 76 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story