தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 6 ஆட்டோக்கள் பறிமுதல்
தர்மபுரியில் தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதரன் மற்றும் குழுவினர் தர்மபுரி- சேலம் சாலையில் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக இயக்கப்பட்ட ஆட்டோக்களில் முறையான ஆவணங்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. 6 ஆட்டோக்கள் தகுதி சான்று மற்றும் அனுமதி சான்று இல்லாமல் இயக்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த 6 ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story