காவிரி ஆற்றில் கழிவுகளை கொட்டிய சரக்கு வாகனம் பறிமுதல்
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் கழிவுகளை கொட்டிய சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் இறைச்சிக்கடைக்காரர்கள் சிலர் கழிவுகளையும் ஆற்றில் கொட்டி மாசு படுத்துகின்றனர். இதையொட்டி நகராட்சி சார்பில் காவிரி ஆற்றில் பாலத்தின் மீது எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் உள்ள புதிய பாலத்தின் மீது ஒரு சரக்கு வாகனத்தில் இருந்து தீவன குப்பை கழிவுகளை ஆற்றில் ஒருவர் கொட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதுகுறித்து சரக்கு வாகனத்தின் எண்ணை வைத்து பள்ளிபாளையம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் சரக்கு வாகனத்தை தேடினர். நேற்று நாமக்கல் மாவட்டம் பட்லூர் ஓ ராஜபாளையம் பகுதியை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் சதீஷ்குமார் என்பவர் தான் குப்பை கழிவுகளை காவிரி ஆற்றில் கொட்டியது தெரியவந்தது. நகராட்சி அலுவலர்கள் அந்த சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.