1 டன் ரேஷன்அரிசி பறிமுதல்


1 டன் ரேஷன்அரிசி பறிமுதல்
x

நாமக்கல் அருகே மாட்டு கொட்டகையில் பதுக்கிய 1 டன் ரேஷன்அரிசியை வருவாய்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல்

அதிகாரிகள் சோதனை

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன்அரிசி கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர் உமா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதன்படி மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் ஆங்காங்கே சோதனை நடத்தி ரேஷன்அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு நாமக்கல் அருகே உள்ள நவணி கிராமத்தில் உள்ள ஒரு மாட்டு கொட்டகையில் ரேஷன்அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

1 டன் ரேஷன்அரிசி பறிமுதல்

இதையடுத்து மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் 20 மூட்டைகளில் சுமார் 1 டன் ரேஷன்அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ரேஷன்அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன்அரிசி மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த ரேஷன்அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர்.


Next Story