1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

தேங்காப்பட்டணம் அருகே உள்ள ராமன்துறை பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குமரி மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, அங்கு சிறு, சிறு மூடைகளில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து எப்ரின் மனைவி ஸ்டான்லி (வயது 51) என்பவரை கைது செய்தனர்.


Next Story