1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

வெண்ணந்தூர் அருகே 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி, சட்ட விரோதமாக கடத்தப்படும் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று வெண்ணந்தூர் - ஆட்டையாம்பட்டி சாலை அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, பஸ் நிறுத்தத்திற்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் 22 சாக்கு மூட்டைகளில் இருந்த சுமார் 1,100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

கைது

இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மல்லசமுத்திரம் அருகே உள்ள எம்.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சிங்காரவேல் (வயது 39) என்பவர் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்து பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

இந்த ரேஷன் அரிசி கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story