1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் இன்று திருமயம் தாலுகா கொசப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வேனை மறித்து சோதனையிட்டனர். அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 28 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் 1 டன் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு வேன் டிரைவரான திருமயம் வாரியப்பட்டியை சேர்ந்த தைனிஸ் (வயது 65) மற்றும் அந்த வாகனத்தில் இருந்த திருமயம் சந்தைபேட்டையை சேர்ந்த மருதமுத்துவின் மனைவி ரஞ்சிதம் (41) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் சரக்கு வேனுடன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story