1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

திமிரி அருகே 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த பரதராமியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வாலாஜா சிவில் சப்ளை குடோனில் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கிய நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story