1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 15 Sept 2023 1:15 AM IST (Updated: 15 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1¼ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மினிவேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

மதுக்கரை


கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1¼ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மினிவேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.


இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


போலீசார் சோதனை


ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை டி.ஜி.பி. வன்னிய பெருமாள் தலைமை யில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் கோவை அருகே மதுக்கரையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.


அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த மினி வேனில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


இதை தொடர்ந்து அந்த மினிவேனை ஓட்டி வந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர், கணுவாயை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 22) என்பதும், கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது.


இதையடுத்து போலீசார் அந்த மினிவேனில் இருந்த 1¼ டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிவேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர் முத்துகிருஷ்ணனை கைது செய்தனர்.


ஒருவருக்கு வலைவீச்சு


மேலும் கோவை கணபதி மணியக்காரபாளையத்தை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் அந்த பகுதியில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலையில் வாங்கி கடத்தலுக்கு உதவியாக இருந்தது தெரியவந்தது. எனவே அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story