வீட்டில் பதுக்கிய 1726 மதுபாட்டில்கள் பறிமுதல்


வீட்டில் பதுக்கிய 1726 மதுபாட்டில்கள் பறிமுதல்
x

பரங்கிப்பேட்டை அருகே வீட்டில் பதுக்கிய 1726 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வி.சி.க.பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர்

பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை அருகே கரிகுப்பம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒன்றிய நிர்வாகியான சத்தியமூர்த்தி (வயது 49) என்பவரது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன், சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 30 பெட்டிகளில் மொத்தம் 1726 புதுச்சேரி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வலைவீச்சு

மேலும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக கரிக்குப்பத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒன்றிய நிர்வாகியான சத்தியமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பார்வையிட்டார். பின்னர் அவர் அங்கிருந்த போலீசாரிடம், மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவரை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story