வீட்டில் பதுக்கிய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வேப்பூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர்
வேப்பூர்,
வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ராபின் எரால்டு தலைமையில் போலீஸ்காரர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று பெரியநெசலூரில் உள்ள அந்த குறி்ப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வீட்டின் உரிமையாளரான கிருஷ்ணன் என்பவரிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story