ஏற்காட்டில் வீட்டில் பதுக்கியநாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்து பறிமுதல்


ஏற்காட்டில் வீட்டில் பதுக்கியநாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்து பறிமுதல்
x
சேலம்

ஏற்காடு

ஏற்காடு நல்லூர் பகுதியில் உள்ள பேய்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 45). இவர் சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிமருந்து வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் தலைமையிலான போலீசார் பேய்காடு கிராமத்தில் ராமசாமி வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ வெடிமருந்து மற்றும் நாட்டுத்துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தகவல் அறிந்து தலைமறைவாக உள்ள ராமசாமியை தேடிவருகின்றனர்.


Next Story