தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
பனப்பாக்கம் பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை
பனப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் பெரும்பாலான மளிகை, டீ மற்றும் பேக்கரி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இந்தநிலையில் பனப்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் குமார் ஆகியோர் உத்தரவின்பேரில், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பிரவீன்குமார் மற்றும் பணியாளர்கள் பஸ் நிலையம், அரக்கோணம் ரோடு, அண்ணா நகர், பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
இது போன்று பிளாஸ்டிக் கவர் மற்றும் கப்களை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story