தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
அரக்கோணத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை
அரக்கோணம் பஜார், காந்தி ரோடு, பழைய பஸ் நிலையம் மற்றும் சுவால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடைகள், டீக்கடைகள், சிற்றுண்டி கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆனந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப், தெர்மாகோல் கப், கேரி பேக் உள்ளிட்டவைகளை பதுக்கி வைத்திருந்த 2 குடோன்களில் இருந்து சுமார் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆனந்த் பறிமுதல் செய்து ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தார்.
ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் ரகுராமன், என்ஜினீயர் செல்வகுமார், சுகாதார அலுவலர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story