தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காணை பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பிரசாத், பத்மநாபன், அன்புபழனி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காணை பகுதியில் உள்ள மளிகை கடைகள், டீ கடைகள், சிற்றுண்டிகடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப், தெர்மாகோல் கப், கேரி பேக் என 450 கிலோ எடையுள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் முறையான லேபிள் இல்லாத உணவு பாக்கெட்டுகள் 10 கிலோவும், அதிக செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட பழச்சாறுகள் 9 லிட்டரும் பறிமுதல் செய்யப்பட்டு அவை கீழே கொட்டி அழிக்கப்பட்டது. இவற்றை பயன்படுத்தியதாக 5 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீசை அதிகாரிகள் வழங்கி தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் ஆய்வின்போது உணவு வணிகர்களுக்கு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், லேபிள் இல்லாத உணவு பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களில் செயற்கை நிறங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.


Next Story