மணல் அள்ளிய மாட்டுவண்டி பறிமுதல்
மணல் அள்ளிய மாட்டுவண்டி பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர்
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் அர்ஜுனுக்கு, அப்பகுதியில் உள்ள அரங்கோட்டை கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவரை கண்டவுடன், ஒரு மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தவர், வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். பின்னர் விக்கிரமங்கலம் போலீசாருக்கு கிராம நிர்வாக அலுவலர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்ற விக்கிரமங்கலம் போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story