கஞ்சா பறிமுதல்


கஞ்சா பறிமுதல்
x

ராஜபாளையம் அருகே கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே ராமலிங்கபுரம் ரெயில்வே கேட் பகுதியில் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூவர்ண தீபா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பையில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தார்கள். யார் அவர்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம் பகுதியில் கஞ்சா மற்றும் புகையிலை ெபாருட்களின் விற்பனை அதிகரித்து வருவதால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story