பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாககாரில் கடத்த முயன்ற 250 கிலோ குட்கா பறிமுதல்டிரைவருக்கு வலைவீச்சு


பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாககாரில் கடத்த முயன்ற 250 கிலோ குட்கா பறிமுதல்டிரைவருக்கு வலைவீச்சு
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக காரில் கடத்த முயன்ற, 250 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவரை தேடி வருகிறார்கள்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரிஜாராணி தலைமையில் சக்திவேல், ரஞ்சித்குமார், ராஜேஷ், இளங்கோவன் உள்ளிட்ட போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூரு சாலையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி ஒரு சொகுசு கார் வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தினார்கள். அப்போது காரில் இருந்த டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடி விட்டார். இதைத் தொடர்ந்து காரை போலீசார் சோதனை செய்த போது அதில், 250 கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது.

டிரைவருக்கு வலைவீச்சு

விசாரணையில் அந்த குட்கா பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து 250 கிலோ குட்கா மற்றும் சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பிடிபட்ட குட்கா மற்றும் சொகுசு கார் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.இது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story