பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ரூ.1.90 லட்சம் குட்கா பறிமுதல்


பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ரூ.1.90 லட்சம் குட்கா பறிமுதல்
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ரூ.1.90 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர வாகன சோதனை நடத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது.

கைது-பறிமுதல்

இதுகுறித்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த அருள்முருகன் (வயது36) என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கேரளாவுக்கு குட்கா கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மெலும் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 358 கிலோ குட்கா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story