ஆம்னி பஸ்சில் கடத்த முயன்ற ரூ.2½ லட்சம் குட்கா பறிமுதல்


தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி வழியாக மதுரைக்கு ஆம்னி பஸ்சில் கடத்த முயன்ற ரூ.2½ லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர், கிளீனரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி வழியாக மதுரைக்கு ஆம்னி பஸ்சில் கடத்த முயன்ற ரூ.2½ லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர், கிளீனரை போலீசார் கைது செய்தனர்.

குட்கா கடத்தல்

கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் கடந்த 7-ந் தேதி ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களுருவில் இருந்து தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் பஸ்சில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்டவை மொத்தம் 500 கிலோ இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் பஸ் டிரைவர் மற்றும் கிளீனரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பெங்களூருவில் இருந்து மதுரைக்கு குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.

2 பேர் கைது

இதுதொடர்பாக போலீசார் பஸ் டிரைவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பிரகாஷ் நகரை சேர்ந்த ரஞ்சித் (வயது 28), பெங்களூரு பீஜ்பூர் பசந்த் பாத்தியா பகுதியை சேர்ந்த கினீனர் பாபு (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் பஸ்சில் கடத்தி வந்த ரூ.2½ லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் பஸ்சை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story