காரில் கடத்த முயன்ற ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல்


காரில் கடத்த முயன்ற ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து காரில் சேலத்திற்கு கடத்த முயன்ற ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

பெங்களூருவில் இருந்து காரில் சேலத்திற்கு கடத்த முயன்ற ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக குட்கா, கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார் வாகன ேசாதனை நடத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரகாஷ் தலைமையில் போலீசார் நேற்று கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், 32 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ரூ.2 லட்சம் மதிப்புள்ள 373 கிலோ எடை கொண்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2 பேர் கைது

இதுகுறித்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெங்களூரு வித்யாராணியாபுரா பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 26) என்பதும், உடன் வந்தவர் கொட்டபொலப்புராவை சேர்ந்த ராஜேந்திரபிரசாத் (23) ஆகியோர் என்பதும் தெரிந்தது. இவர்கள் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்த முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story