வேனில் கடத்த முயன்ற ரூ.2¼ லட்சம் குட்கா பறிமுதல்


வேனில் கடத்த முயன்ற ரூ.2¼ லட்சம் குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:46 PM GMT)

பெங்களூருவில் இருந்து சிவகாசிக்கு வேனில் கடத்த முயன்ற ரூ.2¼ லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

பெங்களூருவில் இருந்து சிவகாசிக்கு வேனில் கடத்த முயன்ற ரூ.2¼ லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் ஓசூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், அலகுபாவி என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.2¼ லட்சம் மதிப்பிலான 342 கிலோ குட்கா இருந்தன.

கைது- பறிமுதல்

இதுகுறித்து வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த முத்து (வயது28) என்பதும், பெங்களூருவில் இருந்து சிவகாசிக்கு குட்கா கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டிரைவரை கைது செய்தனர்.

மேலும் குட்கா மற்றும் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story