காரில் கடத்த முயன்ற 43 கிலோ குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து பவானிக்கு காரில் கடத்த முயன்ற 43 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் இருந்து பவானிக்கு காரில் கடத்த முயன்ற 43 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து குட்கா கடத்துவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானகண்ரகுநாதன் மற்றும் போலீசார் நேற்று கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக 644 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது.
டிரைவர் கைது
இதையடுத்து போலீசார் கார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த தட்டாங்குடடையை சேர்ந்த விமல்எபினேஷன் (வயது 31) என்பதும், பெங்களூருவில் இருந்து பவானிக்கு குட்கா கடத்தியதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து மதிப்பிலான குட்கா, கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.