கல்வராயன்மலையில்சாராயம் காய்ச்ச பதுக்கிய 1,250 கிலோ வெல்லம் பறிமுதல்போலீசார் நடவடிக்கை


கல்வராயன்மலையில்சாராயம் காய்ச்ச பதுக்கிய 1,250 கிலோ வெல்லம் பறிமுதல்போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்ச வீட்டில் பதுக்கிய 1,250 கிலோ வெல்லத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள வஞ்சிக்குழி கிராமத்தில் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக வெல்லம், கடுக்காய் உள்ளிட்ட மூலப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், கரியாலூர் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தகவல் கிடைக்கப்பெற்ற வீட்டுக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 1,250 கிலோ வெல்லம், 5 கிலோ கடுக்காய் விதை, 120 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், சாராயம் காய்ச்ச பயன்படுத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெல்லம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சாராயம் காய்ச்ச வீட்டில் மூலப் பொருட்களை பதுக்கி வைத்ததாக அதேஊரை சேர்ந்த தங்கராஜ்(வயது 55) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story