ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் அன்புசெழியன் தலைமையிலான போலீசாரும் அரக்கோணம் ரெயில் நிலையங்களில் உள்ள நடைமேடை மற்றும் யார்டு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரெயில் நிலையத்தின் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பையுடன் நின்றிருந்த 6 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியை சேர்ந்த இந்திராணி (வயது 60), கீதா (48), பூங்கொடி (48), சுவப்னா (36), மஞ்சுளா (48), செந்தாமரை (60) என்பதும், அவர்கள் ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து ஒரு டன் மதிப்பிலான ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, 6 பேரையும் ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story