பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x

நெல்லை சந்திப்பு பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு பகுதியில் சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது அறிவுறுத்தலின் பேரில் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தச்சநல்லூர் மண்டலம் நெல்லை சந்திப்பு மற்றும் எஸ்.என்.ஹைரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று சோதனை நடத்தினார்கள்.

அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சுமார் 20 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அபராத தொகையாக ரூ.9 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டது.

இதேபோல் நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் மதுரை பைபாஸ் ரோடு எஸ்.என்.ஹைரோடு, மீனாட்சிபுரம், கைலாசபுரம் ஆகிய பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் நேற்று டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் அந்த இடத்தில் கிடந்த பயன்பாடற்ற 1,340 கிலோ எடை கொண்ட டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த டயர்கள் ராமையன்பட்டி உரக்கிடங்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது.


Next Story