கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x

கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர்

புகழூர் நகராட்சிக்குட்பட்ட மளிகை, டீ, பூக்கடைகளில் நகராட்சி ஆணையர் கனிராஜ் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், நகராட்சி ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 10-க்கும் மேற்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மொத்தம் 10 கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஒரு பிரியாணி கடையில் ஆய்வு செய்தபோது, அங்கு மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பைகளை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இதனால் கடையில் இருந்தவர்களுக்கும், நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி சம்பவ இடத்திற்கு வந்து, அந்த கடைக்காரரை எச்சரித்து உரிய அபராதத்தை செலுத்துமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து அபராதம் வசூல் செய்யப்பட்டது.


Next Story