பாலித்தீன் பைகள் பறிமுதல்


பாலித்தீன் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Aug 2023 1:45 AM IST (Updated: 10 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பஸ் நிலையம், பேகம்பூர் பகுதிகளில் உள்ள கடைகளில் பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் பஸ் நிலையம், பேகம்பூர் பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 3 கடைகளில் பாலித்தீன் பைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை பாலித்தீன் பைகளில் வைத்து வழங்குவதற்கு பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 கடைகளிலும் இருந்த 30 கிலோ பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 கடைக்காரர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


Next Story