ரேஷன் அரிசி பறிமுதல்


ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக முதுகுளத்தூர் வட்ட வழங்கல் அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் முதுகுளத்தூர் வட்ட வழங்கல் அதிகாரி கதிரவன் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது முதுகுளத்தூர் அருகே உள்ள மட்டியரேந்தல் கிராமத்தில் பாழடைந்த ஓட்டு வீட்டில் 25 மூட்டை (1000 கிலோ) ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கடலாடி அருகே உள்ள ஏ.புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த உணவு பொருள் வழங்கல் அதிகாரி அவற்றை தமிழ்நாடு உணவுப் பொருள் நுகர்வோர் வணிக கிடங்கில் ஒப்படைத்தார். ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த முத்துராமலிங்கம் என்பவரை ராமநாதபுரம் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story