ரேஷன் அரிசி பறிமுதல்


ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 22 Sept 2023 12:30 AM IST (Updated: 22 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிவிகிரி அருகே ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி

சிவகிரி:

குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் கலா, சப் -இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் சிவகிரி அருகே உள்ள ராயகிரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தெற்குசத்திரம் பகுதியில் நின்ற ஒரு லோடு ஆட்டோவில் 40 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகள் 19 இருந்தது. அதில் இருந்து மொத்தம் உள்ள 760 கிலோ ரேஷன் அரிசியையும், லோடு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story