பர்கூரில் இருந்து ஆந்திராவுக்குஆம்னி வேனில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்டிரைவர் உள்பட 2 பேர் கைது


பர்கூரில் இருந்து ஆந்திராவுக்குஆம்னி வேனில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்டிரைவர் உள்பட 2 பேர் கைது
x

பர்கூரில் இருந்து ஆந்திராவுக்கு ஆம்னி வேனில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பம் சாலை பசவன்ன கோவில் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆம்னி வேன் வந்தது. போலீசார் அந்த வேனை நிறுத்தி அதை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே சந்தேகம் அடைந்த போலீசார் ஆம்னி வேனை சோதனை செய்தனர். அதில் 12 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து வேன் டிரைவர் மற்றும் உடன் வந்தவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் ஆந்திர மாநிலம் குப்பம் தளகுத்தப்பள்ளியை சேர்ந்த கணேஷ்சிங் (வயது32), ஏ.பி.சி. தெருவை சேர்ந்த அப்ரார் (23) என்பதும், பர்கூரில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story