கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது


கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 24 Oct 2023 7:45 PM GMT (Updated: 24 Oct 2023 5:09 PM GMT)

கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவரை கைது செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் கிருஷ்ணகிரியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சேலம் பைபாஸ் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை, நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் வேனில் 50 கிலோ அளவு கொண்ட 141 மூட்டைகளும், 40 கிலோ அளவு கொண்ட 3 மூட்டைகளும் இருந்தன. இதை போலீசார் சோதனை செய்தபோது 7டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது. இ்துகுறித்து வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

டிரைவர் கைது

அவர் காஞ்சீபுரம் மாவட்டம் மேடவாக்கம் அருகே உள்ள வடக்குபட்டு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 38) என்பதும், திருப்பத்தூர் மாவட்டம் அய்யனூர் பகுதியில இருந்து ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராஜேசை போலீசார் கைது செய்தனர். மேலும் 7 டன் ரேஷன் அரிசி, சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் வேன் உரிமையாளரான திருப்பத்தூர் அவுசிங் போர்டை சேர்ந்த பிரகாஷ், அரிசி உரிமையாளர் தமலேரி முத்தூர் அருள், அரிசி சேகரித்து கொடுக்கும் ஏஜெண்ட் பிரபு ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story