மினிலாரியில் கடத்தி வரப்பட்ட 51 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
மினிலாரியில் கடத்தி வரப்பட்ட 51 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் மானாமதுரையை அடுத்த ஆலம்பச்சேரி விலக்கு ரோட்டில் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மினி லாரி ஒன்று வந்தது, அந்த லாரியில் வந்தவர்களை போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதை பார்த்துவிட்டு வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதை தொடர்ந்து போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் 2,050 கிலோ எடை உள்ள 51 மூடை ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த அரிசியை லாரியுடன் கைப்பற்றினார்கள். பிடிபட்ட அரிசியை நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story