கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது


கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்;  2 பேர் கைது
x
தினத்தந்தி 20 April 2023 3:00 AM IST (Updated: 20 April 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையத்தில் இருந்து கேரளாவுக்கு 1½ டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

உத்தமபாளையத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் உத்தமபாளையம் பறக்கும் படை துணை தாசில்தார் முத்துக்குமார், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார், கம்பம்மெட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 1,660 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரில் வந்தவர்களை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (வயது 28), கம்பம் படகுபட்டியை சேர்ந்த நந்தகுமார் (27) என்பதும், ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாண்டீஸ்வரன், நந்தகுமாரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார், ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story