தூத்துக்குடியில் 520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


தூத்துக்குடியில் 520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 21 May 2023 12:30 AM IST (Updated: 21 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் தலைமையிலான போலீசார் குமாரபுரம்- சிவந்திபட்டி சந்திப்பு பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். போலீசாரைக் கண்டவுடன், அந்த காரில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து காரை சோதனை செய்ததில் அதில் சுமார் 520 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story