மினி லாரியில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
மினி லாரியில் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் அம்மன்கொல்லைமேடு கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்றை வழிமறித்தனர். ஆனால் அந்த மினிலாரி நிற்கமால் வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் தங்களது வாகனத்தில் துரத்தி சென்று அந்த மினிலாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் மினிலாரியில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினிலாரியுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக லாரி டிரைவரான கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் (வயது 27) மற்றும் குபேந்திரன் ஆகிய 2 பேரை கைது செய்து விழுப்புரம் உணவு பாதுகாப்பு மற்றும் குடிமை பொருள் பாதுகாப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.