ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
பொன்னை அருகே ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த கீரைசாத்து பகுதியில் ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும்படை தனி தாசில்தார் விநாயகமூர்த்திக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் பறக்கும் படை குழுவினர் அங்கு சென்று சோளிங்கரில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் சோதனை செய்தனர். அப்போது ஆந்திராவுக்கு கடத்துவதற்காக கீரைசாத்து பஸ் நிறுத்த நிழற் குடையில் வைக்கப்பட்டிருந்த 19 மூட்டைகளில் சுமார் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, திருவலம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
மேலும் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story