இருதரப்பினரிடையே மோதல்; 6 பேர் மீது வழக்கு
நெல்லிக்குப்பம் அருகே இருதரப்பினரிடையே நடந்த மோதலில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடலூர்
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கம் பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் அருள்தாஸ். இவருடைய அண்ணன் ஏசுபாவா. அண்ணன்-தம்பி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று அருள்தாசுக்கும், ஏசுபாவாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஒருவரையொருவர் திட்டி தாக்கி மோதிக் கொண்டனர். இதுகுறித்த தனித்தனி புகார்களின்பேரில் இருதரப்பை சேர்ந்த ஏசுபாவா, தமிழ்வேந்தன், வசந்தி மற்றும் அருள்தாஸ், வேலாயுதம், பூபதி ஆகியோர் மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story