டாஸ்மாக் கடையில் மோதல்; 2 பேர் காயம்


டாஸ்மாக் கடையில் மோதல்; 2 பேர் காயம்
x
தினத்தந்தி 21 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 6:45 PM GMT)

ஆலங்குளம் அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயம் அடைந்தனர்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளத்தை அடுத்த அத்தியூத்து கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு நேற்று கழுநீர்குளத்தை சேர்ந்த முருகையா மகன் இசக்கிமுத்து (வயது 35) மது அருந்த சென்றார். அப்போது துத்திகுளத்தை சேர்ந்த திருமலைக்குமார் மகன் தங்கபாண்டி (33) தனது நண்பர்கள் முருகேசன் மகன் கருப்பசாமி (29), முருகன் மகன் மணிகண்டன் (32) ஆகியோருடன் மது அருந்த வந்துள்ளார். அப்போது இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து, வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து தங்கபாண்டியின் முகத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. தங்கபாண்டி தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் இசக்கிமுத்து தலையில் அடித்ததாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து 4 பேர் மீதும் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story