மோட்டார் சைக்கிள் தடுப்பு மீது மோதல்; போலீஸ்காரர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் தடுப்பு மீது மோதல்;  போலீஸ்காரர் படுகாயம்
x

கிணத்துக்கடவில் மோட்டார் சைக்கிள் தடுப்பு மீது மோதிய விபத்தில் போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு,

பொள்ளாச்சி அருகே உள்ள குண்டலப்பட்டி பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன் செல்வகுமார் (வயது 28). இவர் கோவை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று அவர் மோட்டார் சைக்கிளில் வாளையார் பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடிக்கு அலுவல் பணிக்காக சென்று கொண்டிருந்தார். கிணத்துக்கடவில் பொள்ளாச்சி-கோவை நான்குவழி சாலையில் வந்த போது, ஏலூர் பிரிவில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த தடுப்பில் திடீரென மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த செல்வகுமார் பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story