சாலையில் செங்கற்களை வைத்ததால் பரபரப்பு


சாலையில் செங்கற்களை வைத்ததால் பரபரப்பு
x

ஆரணி அருகே சாலையில் செங்கற்களை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள எட்டியப்பன் மகன் இ.அரசு என்பவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பையூர் ஊராட்சிக்குட்பட்ட மில்லர்ஸ் சாலையில் அரசு கார்டன் என்ற வீட்டுமனை பிரிவு ஏற்படுத்தி விற்பனை செய்தார்.

அங்கு சுமார் 45 வீட்டுமனைகள் விற்கப்பட்டு அனைவரும் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வீட்டுமனை பிரிவில் ஒரு தெருவை அரசு தனது பெயரிலேயே வைத்திருந்தார். மேலும் அந்த தெருவின் இடத்தை வங்கியில் அடமானமாக வைத்து கடன் வாங்கியிருந்தார்.

அந்த கடனை திருப்பிச் செலுத்தாததால் அந்த இடத்தை சில வருடங்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது.

இதனை சதுப்பேரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பி.பழனி என்பவர் ஏலத்தில் எடுத்து அவருடைய பெயருக்கு மாற்றிக்கொண்டார்.

தொடர்ந்து இந்த தெரு எனக்கு சொந்தமானது என கூறி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு அறிவிப்பு நோட்டீசை வக்கீல் மூலமாக அனுப்பியுள்ளார்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திடீரென இன்று தெருவில் கட்டிடம் கட்டப்போகிறேன் என கூறி நள்ளிரவில் 2 ஆயிரம் செங்கற்களை இறக்கி சாலையில் வைத்துள்ளார்.

இதனால் அப்பகுதி மக்கள் வெளியே செல்வதற்கு வழியில்லாமல் தவித்தனர். இதனால் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆரணி தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story