ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வாழ்த்து
பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஷ்ருதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
கவனத்தோடும், நிதானத்தோடும், முழு நம்பிக்கையோடும், உங்கள் தேர்வை எதிர்கொண்டு நிறைய மதிப்பெண் பெற்று வருங்கால வெற்றியாளராக, சிறந்த தலைவர்களாக, அதிகாரிகளாக, தேச நலன் காக்கும் பண்பாளராக உயர்ந்திட ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பில் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story